More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • நாடு திரும்பிய திகாம்பரம் சிறிகொத்தவில் இரகசியப் பேச்சு!
நாடு திரும்பிய திகாம்பரம் சிறிகொத்தவில் இரகசியப் பேச்சு!
Jul 16
நாடு திரும்பிய திகாம்பரம் சிறிகொத்தவில் இரகசியப் பேச்சு!

தனிப்பட்ட தேவைக்காக வெளிநாடு சென்றிருந்த தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் நாடு திரும்பிய நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவுக்குச் சென்று முக்கிய சந்திப்பில் பங்கேற்றுள்ளார் என ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.



ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டாரவைச் சந்தித்து கடந்தகால மற்றும் சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் திகாம்பரம் பேச்சு நடத்தியுள்ளார் எனவும் அந்த வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.



இன்னும் ஒரிரு நாட்களில் ரணில் விக்கிரமசிங்கவையும் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனவும் தெரியவருகின்றது.



2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கிய திகாம்பரத்துக்கு நல்லாட்சியின்போது அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவி வழங்கப்பட்டது. 2015 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் யானை சின்னத்தின் கீழ்தான் திகாம்பரம் போட்டியிட்டார். 2018 இல் நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தொழிலாளர் தேசிய சங்கம் முற்போக்குக் கூட்டணியாக யானை சின்னத்தின் கீழ்தான் களமிறங்கியது.



எனினும், 2020 ஜனாதிபதித் தேர்தலில் திகாம்பரம் சஜித்துக்கு ஆதரவு வழங்கினார். பொதுத்தேர்தலில் தொலைபேசி சின்னத்தில் போட்டியிட்டார்.



தற்போது ஐக்கிய மக்கள் சக்திக்குள் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கு குறிப்பாக மலையகத் தலைவர்களுக்கு உரிய இடமில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.



இவ்வாறானதொரு பின்புலத்தில் ஐ.தே.கவுடன் திகாம்பரம் பேச்சு நடத்தியுள்ளமை அரசியல் களத்தில் பரபரப்பாகப்  பேசப்படுகின்றது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep27

இலங்கையின் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால்

Jan16

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம முதல் குருநாகல் வ

Jul14

அமைச்சர் உதய கம்மன்பில நம்பிக்கையில்லா பிரேரணையை எதி

Jan30

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் காவல்துறையினரால் விசேட சு

Mar07

தென்னிலங்கையில் தாய் ஒருவரை கொலை செய்ய முயன்ற மகள் பொ

Jan30

இலங்கையில் சீனாவின் பிரசன்னத்தை கட்டுப்படுத்தும் நோ

Jun06

வெளிநாடுகளில் தொழில் புரிவோர் தங்கள் ஊதியத்தை டொலர்

May20

மகிந்த ராஜபக்ச தனது 2 பதவிக்காலம் முடிவடைந்ததும் ஓய்வ

Sep26

வடக்கு – கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை

Oct14

இந்திய தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் கடலட

Apr19

அரசின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கிடையிலான கூ

Feb02

ஹெரோய்ன், ஐஸ் உள்ளிட்ட பெருந்தொகை போதைப்பொருள் கடத்தல

Feb07

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின்

Mar19

11.6 மில்லியன் ரூபா நிதியில் புதிதாக கட்டப்பட்ட வட்டுக்

Sep20

விகாரைகள் மற்றும் மத ஸ்தலங்களுக்கு மின்சாரத்தை விநிய