கடந்த 201 ஆம் ஆண்டு திருச்சியிலிருந்து கடலூர் நோக்கி சென்ற அரசு பேருந்து நடத்துனருக்கும், காவலருக்கும் டிக்கெட் எடுப்பதில் ஏற்பட்ட பிரச்னையால் நடத்துனர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த நிலையில், பேருந்தில் பயணிக்கும் போலீசார் அனைவரும் டிக்கெட் எடுக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து டிஜிபி சைலேந்திரபாபு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “இனி வரும் காலங்களில் மேற்கண்ட மோதல் போக்குச் சம்பவம் போல் நிகழாமல் இருக்க அரசுப் பேருந்துகளில் வாரண்ட் இல்லாமல் பயணம் செய்யும் போலீஸார் முறைப்படி டிக்கெட் எடுக்க வேண்டும். மாநில மனித உரிமை ஆணைய வழிகாட்டுதல், உத்தரவை அனைத்து போலீஸாரும் கடைப்பிடிப்பதை அந்தந்தத் துறை அதிகாரிகள் உறுதிப்படுத்திட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
