More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம் செல்போன் ஒட்டு கேட்புக்கும் எனக்கும் சம்பந்தம் கிடையாது: பிரான்ஸ் அதிபரிடம் இஸ்ரேல் பிரதமர் கைவிரிப்பு!
பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம் செல்போன் ஒட்டு கேட்புக்கும் எனக்கும் சம்பந்தம் கிடையாது: பிரான்ஸ் அதிபரிடம் இஸ்ரேல் பிரதமர் கைவிரிப்பு!
Jul 26
பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம் செல்போன் ஒட்டு கேட்புக்கும் எனக்கும் சம்பந்தம் கிடையாது: பிரான்ஸ் அதிபரிடம் இஸ்ரேல் பிரதமர் கைவிரிப்பு!

பெகாசஸ் மூலம் தலைவர்களின் செல்போன் ஒட்டு கேட்கப்பட்டதாக கூறப்படும் காலக்கட்டத்தில் நான் ஆட்சிப் பொறுப்பில் இல்லை,’ என்று பிரான்ஸ் அதிபரிடம் இஸ்ரேல் பிரதமர் கூறியுள்ளார்.  உலகின் பல நாடுகளிலும் பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.



இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஓ நிறுவனம் தயாரித்த இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த, பல நாட்டு அதிபர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், பத்திரிகையாளர்களிடம் என 50 ஆயிரம் பேரின் செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.



இதில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் மற்றும் அவரது 15 அமைச்சர்களின் செல்போன்களை மொராக்கோ நாட்டு பாதுகாப்பு படையினர் ஒட்டு கேட்டதாக கூறப்படுகிறது.



இது தொடர்பாக ஏற்கனவே தேசிய பாதுகாப்பு ஆலோசனை கூட்டத்தை கூட்டி பிரான்ஸ் அதிபர் மெக்ரான் நடத்தினார். இதைத் தொடர்ந்து அவர் நேற்று முன்தினம் இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட்டை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அப்போது, ‘இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக் கொண்டு, விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என மெக்ரான் வலியுறுத்தி உள்ளார்.



அதற்கு இஸ்ரேல் பிரதமர் பென்னட், ‘குற்றச்சாட்டு கூறப்படும் காலகட்டத்தில் தான் ஆட்சிப் பொறுப்பில் இல்லை. அதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை. இருந்தாலும், இந்த விவகாரத்தில் முடிவு எட்டப்பட்டதும் அது குறித்து தெரிவிக்கிறேன்,’ என உறுதி அளித்துள்ளார்.



அதே சமயம், பிரான்ஸ் அதிபர் செல்போன் ஒட்டு கேட்கப்பட்டதை மொராக்கோ அரசு மறுத்துள்ளது. இந்த விஷயத்தில் பிரான்ஸ் அரசோ, அதிபர் மெக்ரானோ குறிவைக்கப்படவில்லை என்பதை என்எஸ்ஓ நிறுவனமும் உறுதியாக கூறி உள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May18

 ரஷ்யாவின் அதிபர் பதவியில் இருந்து விளாடிமிர் புட்ட

Apr02

 அமெரிக்காவில் சமீப காலமாக பொது இடங்களில் துப்பாக்க

Jun13

சிரியா நாட்டில் பல ஆண்டுகளாக உள் நாட்டு போர் நடந்து வர

Jan18

அமெரிக்காவில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநா

Jul17
Aug26

ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றிய நிலையில், கடந்த 14-

Aug18

பெண்களுக்கான சுதந்திரத்தை வழங்க வேண்டுமென தாலிபான்க

Mar17

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் மூன்று இடங்களில்

Oct25

பிரித்தானியாவின் புதிய பிரதமராக ரிஷி சுனக் 57ஆவது பிரத

May22

கிழக்கு உக்ரைனின் சில பகுதிகளில் ரஷ்ய பெற்றுள்ள இராணு

Feb05

வெளிநாட்டு பயணிகள் நாட்டுக்குள் நுழைய இரண்டு வார காலத

Mar18

உக்ரைன் - ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான நிலைமையை

Dec29

 ரஷ்ய ஜனாதிபதி புடின் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி வோலோட

Aug31

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக பைசர் தடுப்பூசி பயன்பட

Oct03

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை