More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • பயிர் காப்பீட்டு திட்டம் : பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
பயிர் காப்பீட்டு திட்டம் : பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
Jul 29
பயிர் காப்பீட்டு திட்டம் : பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

பயிர் காப்பீட்டு திட்டம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீடு கட்டணத்தில் முன்பிருந்த நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.



இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீடு கட்டணத்தில் ஒன்றிய அரசின் பங்களிப்பினை குறைக்கும் வகையில் உயர்ந்தபட்ச விகிதத்தை நிர்ணயிக்கும் முறையை நீக்கி மாநிலத்தில் உள்ள விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு முன்பு இருந்த படி 49: 49:2 என்ற விகிதத்தில் காப்பீடு கட்டண பங்கினை திரும்ப மாற்றியமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.



வேளாண்துறையில் விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வேளாண்மை மற்றும் ஊரக நலத்துறை என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின் ,தமிழ்நாட்டில் சாகுபடி பரப்பை அதிகரித்தல் ,ஒரு முறைக்கு மேல் சாகுபடி செய்யும் பரப்பினை இரட்டிப்பாக்குதல் மற்றும் உணவுத் தானியங்களின் உற்பத்தி திறனை அதிகரித்தல் ஆகிய மூன்று தொலைநோக்கு பார்வையுடன் வேளாண்மைக்கு என தனி வரவு செலவு திட்ட அறிக்கையை நடப்பாண்டு முதல் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.



மேலும் விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கும் முக்கிய திட்டங்களில் ஒன்றான பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தை தமிழக தமிழ்நாடு வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது என்றும் தமிழ்நாடு மேற்கொண்ட சீரிய முயற்சிகளை நாள் காப்பீடு செய்யப்பட்ட பரப்பளவும் பதிவு செய்துள்ள விவசாயிகளின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது என்றும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.



இந்த நிலையில் காப்பீடு கட்டண மானியத்தில் ஒன்றிய அரசின் பங்கினை 49 விழுக்காட்டிலிருந்து பாசன பகுதிகளுக்கு 25 விழுக்காடாகவும் ,மாணவர் இப்பகுதிகளுக்கு 30 விழுக்காடாகும் , 2016 -17 இல் 566 கோடி ரூபாயாக இருந்த மாநில அரசின் பங்கு 2020- 21 1,918 கோடி ரூபாயாக அதாவது 239 விழுக்காடு அளவிற்கு அதிகரித்துள்ளது என்று கூறுகின்றனர். கொரோனா தொற்று உள்ள இந்த காலகட்டத்தில் மாநில அரசு நிதி சுமை அதிகரித்து வரும் நிலையில் இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவது தமிழக அரசுக்கு சவாலாகவும் கடினமாக உள்ளது என்றும் ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை இத்திட்டத்தின் மூலம் உள்ளதாகவும் அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.



எனவே பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் ஒன்றிய அரசின் பங்கினை குறைக்கும் வகையில் உயர்ந்தபட்ச விகிதத்தை நிர்ணயிக்கும் முறையை நீக்கி மாநிலத்தில் உள்ள விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு காப்பீடு திட்டத்தில் ஒன்றிய அரசு மாநில அரசு மற்றும் விவசாயிகளின் பங்கினை முறையே 49: 49:2 என்ற விகிதத்தில் உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar11

நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்ப

Jul20

வேலை நிறுத்தம் மற்றும் விடுமுறைகள் காரணமாக கடந்த வாரத

May16

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்

Aug26

 ஒன்றிய அரசின் தேசிய பணமாக்குதல் திட்டத்தை கிண்டல் ச

Feb25

நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் த

Mar10

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்க

Jul17

தமிழ்நாடு பா.ஜ.க.மாநில துணைத் தலைவராக இருந்த அண்ணாமலைய

Jul10

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவ

Feb12

பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 14 ஆம் திகதி சென்னை வர

Feb12

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது கணிசமாக

Jan17

காஷ்மீரில் நாசவேலைகளை அரங்கேற்றி வந்த பயங்கரவாதிகளை

Feb25

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை

Jul15
Aug13

வெள்ளை அறிக்கை என்ற பெயரில் வெற்று அறிக்கையை வெளியிட்