வவுனியாவில் ஓரே குடும்பத்தைச் சேர்ந்த 11 உட்பட 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
அதில், விநாயகபுரம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பதினொரு பேருக்கும், நேரியகுளம் பகுதியில் பத்து பேருக்கும், தோணிக்கல் பகுதியில் இருவருக்கும், உளுக்குளம் பகுதியில் ஒருவருக்கும், மதீனாநகர் பகுதியில் ஒருவருக்கும், நெடுங்கேணி பகுதியில் ஒருவருக்கும், பெரிய உளுக்குளம் பகுதியில் ஒருவருக்கும், பாரதிபுரம் பகுதியில் மூவருக்கும், காத்தார்சின்னக்குளம் பகுதியில் மூவருக்கும், சிறிராமபுரம் பகுதியில் ஐந்து பேருக்கும், வவுனியா சிறைச்சாலை கைதிகள் மூவருக்கும், ஒலுமடு பகுதியில் ஒருவருக்கும், பத்தினியார் மகிழங்குளம் பகுதியில் ஒருவருக்கும், மகாறம்பைக்குளம் பகுதியில் ஒருவருக்கும், பம்பைமடு பகுதியில் ஒருவருக்கும், தட்டாங்குளம் பகுதியில் ஒருவருக்கும் என 46 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.