More forecasts: 30 day weather Orlando

உலக விளையாட்டு

  • All News
  • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றி அபார சாதனை படைத்தது வங்காளதேசம்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றி அபார சாதனை படைத்தது வங்காளதேசம்!
Aug 07
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றி அபார சாதனை படைத்தது வங்காளதேசம்!

ஆஸ்திரேலியா அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரு போட்டிகளையும் வங்காளதேசம் வென்றிருந்தது.



இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற வங்காளதேசம் அணி முதலில் பேட் செய்தது.



அதன்படி, வங்காளதேசம் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் மக்மதுல்லா அதிகபட்சமாக 52 ரன்கள் எடுத்தார்.



ஆஸ்திரேலியா அணி சார்பில் நாதன் எல்லிஸ் 3 விக்கெட், ஹேசில்வுட், சாம்பா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.



இதையடுத்து, 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. ஆனால் வங்காளதேச அணியினரின் துல்லியமான பந்து வீச்சு மற்றும் பீல்டிங்கால் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா திணறியது.



கேப்டன் வேட் ஒரு ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். மெக்டொமெட்டுடன் ஜோடி சேர்ந்த மிட்செல் மார்ஷ் 63 ரன்கள் சேர்த்தார்.



மெக்டொமெட் 35 ரன்னில் ஆட்டமிழந்தார். மிட்செல் மார்ஷ் அரை சதமடித்து 51 ரன்னில் வெளியேறினார்.  அடுத்து இறங்கிய ஹென்ரிக்ஸ் 2 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.



ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற கடைசி 4 ஓவரில் 38 ரன்கள் தேவைப்பட்டது.  17வது ஓவரில் 4 ரன்னும், 18வது ஓவரில் 11 ரன்னும், 



19வது ஓவரில் ஒரு ரன்னும், கடைசி ஓவரில் 11 ரன் என மொத்தம் 27 ரன்கள் விட்டுக் கொடுத்தனர்.



இறுதியில், ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட் இழப்புக்கு 117 ரன்கள் மட்டுமே எடுத்து பரிதாபமாக தோற்றது. இதன் மூலம் 10 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேசம் அபார வெற்றி பெற்றது. அத்துடன் டி20 தொடரைக் கைப்பற்றி தொடரில் 3-0 என முன்னிலை வகிக்கிறது. ஆட்டநாயகன் விருது மக்மதுல்லாவுக்கு அளிக்கப்பட்டது.



வங்காளதேசம் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை முதல் முறையாகக் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul06

டெல்லி லெவன் அணிக்கும் சிம்பா அணிக்கும் கிளப் கிரிக்க

Jul26

வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது ஒ

Mar04

இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக இருந்த விராட் கோலியா

Oct05

ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் லீக்கின் 2-வது பாதி ஆட்டங்கள் கடந

Apr23

ஐபிஎல் 2022 சீசன் கிரிக்கெட்டில் நேற்று ராஜஸ்தான் ராயல்

Mar03

2022 ஐபிஎல் தொடரில் பெரும்பாலான போட்டிகளிலிருந்து சிஎஸ்

May15

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் வருடாந்திர புதுப்பிக

Jul19

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அண

Sep19

மோட்டோ ஜிபி பந்தயத்தின் கிரான் பிரீமியோ அனிமோகா பிராண

Oct30

டி20 உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அண

Feb04

ஜனவரி மாதத்துக்கான சிறந்த வீரருக்கான பரிந்துரைப் பட்

Jan13

2015-க்குப் பிறகு முதல்முறையாக ஐபிஎல் போட்டியில் பங்கேற

Oct24

மேலும் மூன்று இலங்கை வீரர்கள் அவுஸ்திரேலியாவிற்கு அழ

Mar14

அதிரடியாக ஆடிய ரிஷப் பண்ட் குறைந்த பந்துகளில் அரை சதம

Feb01

நெஞ்சுவலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இ