More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • காபூல் விமான நிலையத்தில் துப்பாக்கிச்சண்டை: வீரர் ஒருவர் பலி- பதட்டத்தில் பொதுமக்கள்...
காபூல் விமான நிலையத்தில் துப்பாக்கிச்சண்டை: வீரர் ஒருவர் பலி- பதட்டத்தில் பொதுமக்கள்...
Aug 23
காபூல் விமான நிலையத்தில் துப்பாக்கிச்சண்டை: வீரர் ஒருவர் பலி- பதட்டத்தில் பொதுமக்கள்...

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர். அவர்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்குமோ? என அஞ்சும் மக்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி வருகின்றனர். அவர்கள் வெளிநாட்டிற்குச் செல்ல விமான வழி ஒன்றே தீர்வு என்பதால், காபூல் சர்வதேச விமான நிலையத்திற்கு படையெடுத்து வருகிறார்கள்.



அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் அவர்களுடைய நாட்டினரை அழைத்துச் செல்வதுடன் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்களையும் அழைத்துச் செல்கிறது. ஆயிரக்கணக்கானோர் கூடியுள்ளதால் காபூல் விமான நிலையத்தில் அசாதாரண சூழ்நிலையே நிலவுகிறது. கைக்குழந்தைகளுடன் காத்திருக்கும் பெண்கள் குடிக்க நீர், சாப்பிட உணவு இல்லாமல் தவித்து வருகிறார்கள். நேற்று கூட்ட நெரிசலில் சிக்கி ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.



அமெரிக்க படைகள், நேட்டோ படைகள் காபூல் விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆப்கானிஸ்தான் படைகளும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளது.



இன்று காலை திடீரென விமான நிலையத்தின் வடக்கு வாசல் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் ஆப்கானிஸ்தான் வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். ஆப்கானிஸ்தான் வீரர்களும் பதிலடி கொடுத்தனர். இதில் ஆப்கானிஸ்தான் வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் காபூல் விமான நிலையத்தில் கூடுதல் அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளது.



துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதும் சுதாரித்துக் கொண்ட அமெரிக்க மற்றும் ஜெர்மனி வீரர்கள் கூட்டாக இணைந்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்தத் தகவலை ஜெர்மனி ராணுவம் தெரிவித்துள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun07

இரண்டு வயது சிறுவன் தனது தந்தையை தவறுதலாக சுட்டு கொன்

Jun26

சீனாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ஹெனன் மாகாணத்தி

Mar25

முதன் முறையாக ஜெர்மனியில் டெஸ்லா நிறுவனத்தின் தொழிற்

May17

கனடாவில் தமிழர் ஒருவரை வாகனத்தில் மோதிவிட்டு தப்பிச்

Apr13

உக்ரைன் மீது ரஷிய படைகள் நடத்திய தாக்குதல்களில் இதுவர

Apr25

இந்தியாவில் இருந்து நேரடி விமான போக்குவரத்துக்கு குவ

Mar23

ரஷ்யா இன்னும் உக்ரைனில் தனது இராணுவ இலக்குகள் எதையும்

Mar29

இந்தோனேஷியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள துறைமு

Mar09

நேட்டோ அமைப்பில் நுழைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து உ

Mar16

ரஷ்யா - உக்ரைன் போர் இன்றுடன் 20 ஆவது நாளாக தொடர்ந்து தீவ

Mar15

சீனாவில், உருமாறிய கொரோனா வைரஸான ஒமிக்ரோன் வைரஸ் பரவல

Apr11

தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியா, நெருப்பு வளையம் எ

May31

பாகிஸ்தானில் காதல் பிரச்சனையில் ஏற்பட்ட மோதலில் 4 வயத

Mar27

எலெக்ட்ரிக் பைக் பேட்டரி வெடித்துச் சிதறியதால் ஏற்பட

Apr24

ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் 26-ம் தேதி மாஸ்க